சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பல்வேறு மாநிலங்கள் உதாரணமாக இருக்கும் போது தமிழகம் மட்டும் தயங்குவது ஏன்? என பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :
தமிழ் ஜனம் தொலைக்காட்சி பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் திமுகவின் முகத்திரை கிழிந்துள்ளது. மு.க.ஸ்டாலின் தற்போது எடுத்திருக்கும் நிலைப்பாட்டை இதுவரை எந்த முதல்வர்களும் எடுத்ததில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முதலமைச்சருக்கு புரிதல் இல்லை.
சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தலாம் என்ற பாமகவின் வாதத்திற்கு ஜனம் தொலைக்காட்சி பெற்ற தகவல் வலு சேர்த்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பல்வேறு மாநிலங்கள் உதாரணமாக இருக்கும் போது தமிழகம் மட்டும் தயங்குவது ஏன்? அரசியல் ரீதியான காரணங்களுக்காக மட்டுமே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த திமுக மறுக்கிறது.
சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியத்தை உணர்ந்து இனியாவது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு முன்வர வேண்டும் என பாலு வலியுறுத்தியுள்ளார்.