கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள நமது முகாம் அலுவலகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலை மற்றும் மேட்டுப்பாளையம் நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கான விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. இதனை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
மேலும், வீர கார்த்திகேயன் நினைவுத் திடலில், இந்து முன்னணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசர்ஜன பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் , இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் தினமும் ஆறு கொலைகள் நடக்கும் அளவுக்கு மிக மோசமான நிலை தமிழகத்தில் உள்ளதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் ஆன்மீகத்தை திமுக, அதிமுகவால் அழிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.