கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பொன்விழா நகர் பகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வீடு வீடாக சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார்.
மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொன்விழா நகரில் கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார்.
அப்போது, மத்திய அரசின் சாதனைகள் பற்றியும், பிரதமர் மோடியின் நிர்வாகத் திறன் பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார். மேலும், பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களது நிறை குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியின்போது கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சங்கீதா, துணை தலைவர் விக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.