மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்ததாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தலைப்பாகை அணிய கூட சீக்கியர்கள் பயப்படுவதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, சீக்கியர்களின் பிரச்னைகளுக்கு மத்திய பாஜக அரசு தகுந்த முறையில் தீர்வு அளிப்பதாக தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், சீக்கியர்களுக்கு தற்போதுதான் பாதுகாப்பும் கெளரவமும் இருப்பதாக கூறிய அவர், ராகுல் காந்தியின் குடும்பம் ஆட்சியில் இருந்தபோது பாதுகாப்பற்ற உணர்விலும், அழிவின் அச்சுறுத்தலிலும் சீக்கியர்கள் காலத்தை தள்ளியதாக ஹர்தீப் சிங் புரி வேதனை தெரிவித்தார்.
மேலும் 1984-இல் இந்திரா காந்தி படுகொலையின்போது சீக்கியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையில் 3,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.