தருமபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் மாதம் 4-ம் தேதி அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுமென பாமக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென குற்றம் சாட்டியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டமாகவே தொடர்வதை அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.