பெரம்பலூரில் பெண் தோழியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற கூலித்தொழிலாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலம்பாடி அடுத்த இந்திரா நகரை சேர்ந்த மோகன்ராஜ் தமது மனைவி மகாலட்சுமி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் மகாலட்சுமியும் திருச்சியை சேர்ந்த நாகராஜும் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக நாகராஜிடம் பேசுவதை மகாலட்சுமி தவிர்த்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், மகாலட்சுமியின் வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.
தகவலறிந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.