கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே உள்ள ஹோமியோ மருத்துவ கல்லூரியில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வரும் 15 ஆம் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் குலசேகரத்தில் உள்ள தனியார் ஹோமியோ மருத்துவ கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அப்போது கல்லூரி மாணவர்கள் வாமணன் போல் வேடமணிந்தும் வண்ண கோலமிட்டும் கொண்டாடினர்.