சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் 10-ஆம் கட்ட அகழாய்வில் சிவப்பு நிற பானை கண்டெடுக்கப்பட்டது.
கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூன் 18-ஆம் தேதி பணிகள் தொடங்கிய நிலையில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு கழுத்து அணிகலன்கள், கண்ணாடி மணிகள், பாசிகள், சுடுமண் குழாய் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது 2 அடி உயரம் கொண்ட சிவப்பு நிற பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.