சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், சுரங்க உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு செலுத்தும் ராயல்டியானது, வரியாக கருத்தப்படாது என்றும் உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.
அரசியலமைப்பு சட்டப் பிரிவு 246-இன்படி, சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவின் மீதான விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அனுமதி அளிப்பதால் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக வாதிட்டார்.
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு கோரியதால், வியப்படைந்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அடுத்தகட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.