கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட ஆந்திரா மற்றும் தெற்கு ஓடிசாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் சபரி, கவுதமி, கோதாவரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை ஒட்டியுள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மீனவர்களும் ஆறு மற்றும் கடலில் மீன் பிடிக்க செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ள நீரை மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.