திருச்சியில் பாலியல் தொழில் நடத்தியவர்களிடம் லஞ்சம் பெற்ற 7 காவலர்கள் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஏர்போர்ட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விபச்சார தடுப்பு பிரிவு காவலர்கள் கீதா, சகாதேவன் உள்ளிட்ட 7 பேர் பாலியல் தொழில் நடத்தியவர்களிடம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து 7 காவலர்களும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.