சென்னையில் சிறுவனை தாக்கிய விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பிரபல பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பிரபல பாடகர் மனோவின் மகன்களான சாகீர் மற்றும் ரபீக் ஆகியோர், தங்களது வீட்டின் முன்பாக சென்றுக்கொண்டிருந்த சிறுவன் உட்பட 2 பேரிடம் ரகளையில் ஈடுபட்டு அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும் அளித்த புகாரின் பேரில் ரபீக், மற்றும் சாகீர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சிறுவனை தாக்கிய இருவரும் தலைமறைவான நிலையில் செல்போன் சிக்னல்களை வைத்து அவர்களை பின் தொடர்ந்து வரும் தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்ய ஈ.சி.ஆர் பகுதிக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.