ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு துண்டுகளை ஏற்றி வரும் லாரிகளில் இருந்து விழும் கரும்பு துண்டுகளை சாப்பிடுவதற்காக தாளவாடி மலை சாலைகளில் காட்டு யானைகள் அவ்வப்போது உலா வருகின்றனர்.
இந்நிலையில், தாளவாடி வனச்சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானை, அந்த வழியாக வந்த காரை நோக்கி வேகமாக சென்றுள்ளது. இதனைக் கண்ட ஓட்டுநர் காரை வேகமாக பின்நோக்கி இயக்கி உயிர் தப்பியுள்ளார்.