முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி பங்கேற்றது ஏன் என காங்கிரஸுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீட்டில் நடைபெற்ற கணபதி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதனால் நீதித்துறை சமரசப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் விமர்சித்தது.
இதற்கு பதிலடி கொடுத்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா, கடந்த 2009-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இப்தார் விருந்தில் தலைமை நீதிபதி பங்கேற்றது ஏன் என கேள்வி எழுப்பியதுடன், அதற்கான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதேபோல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை நீதிபதியுடன் உரையாடியதாக கூறிய ஷெஹ்சாத் பூனவாலா, அதே நீதிபதிதான் பிற்காலத்தில் மனித உரிமைகள் ஆணைய தலைவராக பதவி வகித்ததாக குறிப்பிட்டார்.