உக்கிரமடையும் உக்ரைன் போர் - ரஷ்யாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை வழங்கிய ஈரான்!
Nov 16, 2025, 10:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்கிரமடையும் உக்ரைன் போர் – ரஷ்யாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை வழங்கிய ஈரான்!

Web Desk by Web Desk
Sep 15, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் ரஷ்யாவுக்கு Fath-360 எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கி இருக்கிறது. கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி 200 Fath-360 ஏவுகணைகள், காஸ்பியன் கடல் வழியாக ரஷ்யாவை வந்தடைந்தது. துல்லியம் மற்றும் விரைவான தாக்குதலுக்குப் பெயர் பெற்ற இந்த ஆயுதம் ரஷ்யா உக்ரைன் போரின் பாதையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 30 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா- உக்ரைன் போர் நடந்து வருகிறது. உண்மையைச் சொல்வதென்றால், ரஷ்யா ஒரே நேரத்தில் இரண்டு போரை எதிர்கொள்கிறது. உக்ரைனுடனான போர் ஒன்று என்றால் நேட்டோவுடன் மற்றொரு போர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஈரானிடமிருந்து, ரஷ்யா Fath-360 ஏவுகணைகள் பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் Fath-360 ஏவுகணைகளின் முதல் தொகுதி ரஷ்யாவுக்கு வந்துள்ளது.

ஈரானால் உருவாக்கப்பட்ட Fath-360, Fateh-360 என்றும் அழைக்கப்படுகிறது. Fath-360, ஏவுகணை ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.

துல்லியமான மற்றும் விரைவான தாக்குதல் திறன்களுடன் இந்த ஏவுகணை உருவாக்கப் பட்டிருக்கிறது. ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகளைத் தாக்க ,செயற்கைக்கோள்-வழிகாட்டப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை என்பது குறிப்பிடத் தக்கது.

இது, ஆறு-க்கு ஆறு டிரக் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஏவுகணைகள் 1,700 பவுண்டுகள் எடையும் 75 மைல்கள் வரை தாக்கக் கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பல ஏவுகணைகளை ஒரு ஏவுகணையில் ஏற்றும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இதனால் எதிரி இராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள்கூட இந்த ஏவுகணைகளைத் தடுக்க முடியாது என்கிறார்கள். விரைவான ஏவுதலை செயல்படுத்தும் திட-எரிபொருள் இயந்திரம், போர்க்களத்தில் இந்த ஏவுகணையின் செயல்திறனை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் HIMARS என்ற ஏவுகணையை விடவும் ​​இந்த Fath-360, ஏவுகணை சிறந்தது என்றும் ராணுவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். Fath-360, Mach 4 அமைப்பில் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கக் கூடியது என்று கூறுகிறார்கள்.

ஏற்கெனவே ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 8,400 பவுண்டுகள் எடை கொண்ட இஸ்கண்டர் பாலிஸ்டிக் ஏவுகணை 310 மைல் தூரம் சென்று தாக்கக் கூடியது. அதேவேளையில், ரஷ்யாவுக்கு வட கொரியா வழங்கிய 7,500 பவுண்டுகள் எடை கொண்ட KN-23 ஏவுகணைகள் 560 மைல்கள் வரை சென்று தாக்கக் கூடியது. இந்த இரண்டு ஏவுகணைகளை விடவும் ஈரானின் Fath-360 மிக சிறந்ததாக தயாரிக்கப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ரஷ்யா இதுகுறித்து எதுவும் தெரிவிக்காத நிலையில், ரஷ்யாவுக்கு ஏவுகணைகளை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் Blinken மற்றும் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் David Lammy ஆகியோர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்திக்கும் அதே நேரத்தில்,ஈரானின் அதிநவீன ஏவுகணைகளை ரஷ்யா வாங்கியிருக்கிறது.

உக்ரைனுக்கு எதிராக உடனடியாக ரஷ்யா இந்த ஈரானின் ஏவுகணைகளைப் பயன்படுத்தும் என்று கடந்த வாரம் லண்டனில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் உறுதி படுத்தியிருந்தார்.

இதன் காரணமாக ,அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் நேட்டோ நாடுகளும் இறுதியாக ரஷ்யா நாட்டுக்குள் முக்கிய இலக்குகளில் தங்களின் MGM-140 நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை அமைப்பு மற்றும் பிரிட்டன் தயாரித்த புயல் நிழல் கப்பல் ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி அளிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால், ரஷ்யா உக்ரைன் வரும் வாரங்களில் மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Tags: russiaIranUkraine russia warFath-360 ballistic missiles
ShareTweetSendShare
Previous Post

ஓணம் பண்டிகை வரலாறு – சிறப்பு கட்டுரை!

Next Post

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை நோக்கி கமலா ஹாரிஸ் – சிறப்பு கட்டுரை!

Related News

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies