வருங்காலங்களில் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மேலும் அதிக பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளதாக பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற துளசிமதி தெரிவித்துள்ளார்.
பாரீசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்ற கால்நடை மருத்துவ கல்லூரி மாணவி துளசிமதிக்கு, நாமக்கல் லத்துவாடியில் உள்ள கல்லூரியில், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் உமா, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், சக மாணவர்கள் மேளத்தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கப்பதக்கம் வாங்கவில்லை என கஷ்டமாக இருந்தது, இந்த பாராட்டை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. இறுதி போட்டியில் உடல் ஒத்துழைக்காததால் தங்கப்பதக்கம் பெற முடியவில்லை அடுத்த போட்டியில் கண்டிப்பாக தங்கப்பதக்கம் பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன் என தெரிவித்தார்.
பாரா ஒலிம்பிக்கி போட்டி இந்தியாவில் வளர்ந்து வருகிறது இன்னும் அதிக பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.