திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவை இல்லை என்றும், தமிழகத்தில் தேசிய சாயலில்தான் கட்சி வர வேண்டும் எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தாவது :
திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவை இல்லை. தமிழ்நாட்டில் தேசிய சாயலில்தான் கட்சி வர வேண்டும். விஜய் வேற்றுப் பாதையில் பயணிப்பாரென நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் இப்படித்தான் என காட்டிவிட்டார். திமுக பாதையில் விஜய் திராவிட சாயலை சாயமாக பூசிக் கொண்டார். சாயம் வெளுகிறதா அல்லது வேறொரு சாயத்தை பூசி கொள்வாரா என்பது போகப் போக தான் தெரியும்.
ஒரு திரைப்படத்தை திரையிட விடவில்லை, ஒரு மாநாட்டை நடத்த இடையூறு ஏற்படுத்தப்படுகிறது. தேசியத்தின் பக்கம் வந்தால் கூட பரந்த நிலைப்பாட்டோடு அழைத்துச் செல்வோம். ஆனால் திராவிட சாயத்தை பூசி கொண்டால் அவ்வளவுதான்.
இரு மொழி கொள்கை என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏமாற்று வேலை.கும்மிடிப்பூண்டியை தாண்டினால் யாருக்கும் எந்த அங்கீகாரமும் கிடைக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் திமுக உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.