ஆட்சியைப் பிற கட்சிகளோடு பகிர்ந்து கொள்ளும் நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் இல்லை என, விடுலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியளித்தார்.
அப்போது, டெல்லியில் உள்ளது போல் தமிழகத்தில் ஆட்சியை பிற கட்சிகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் இல்லை.மக்களின் செல்வாக்கு ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் உள்ளது.
எனவே ஆட்சியில் பங்கு கேட்க இது சரியான நேரம் அல்ல என காங்கிரசுக்கும் தெரியும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தெரியும் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய எங்களுக்கும் இது தெரியும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் துணை முதல்வர் நியமனம் குறித்து கேட்டதற்கு அது முழுக்க முழுக்க திமுகவின் உட்கட்சி விவகாரம் என்றும், இதில் பிற கட்சிகள் கருத்து கூற அவசியம் இல்லை என திருமாவளவன் தெரிவித்தார்.
ஒரு துணை முதல்வர் அல்ல, பல துணை முதல்வர்களையும் நியமனம் செய்யலாம், பல புதிய அமைச்சர்களையும் நியமிக்கலாம், அது அந்த கட்சியின் சுதந்திரம் என்றும் அவர் கூறினார்.