மத்திய அரசுக்கு எதிராக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சைலென்ஸ் விநியோகம் மற்றும் ஸ்பெக்ட்ரம் சேவைகளுக்காக மத்திய தொலைதொடர்பு அமைச்சகத்துக்கு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது.
இதுதொடர்பான வழக்கை கடந்த 2019-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், வோடஃபோன் இந்தியா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் 92 ஆயிரம் கோடியை அடுத்த மூன்று மாதத்தில் செலுத்த உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொலைதொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.