புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை - ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
May 6, 2026, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Murugesan M by Murugesan M
Sep 21, 2024, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன. கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகைதந்த ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நம்பெருமாளை வழிபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உற்சவர் எண்ணப்பர், ஸ்ரீதேவி, பூமிதேவி ஆகியோருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்ததை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர். அதிகாலை முதலே கோயிலில் திரண்ட பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்த பக்தர்களுக்கு லட்டு, பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் 60-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags: Kumbakonam Venkatajalapathi templePuratasi monthperumal templessriangam perumal temple
ShareTweetSendShare
Previous Post

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வு தொடக்கம் – சுமார் 650 பேர் பங்கேற்பு!

Next Post

அரியலூர் அருகே பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பெண்ணிடம் ரூ. 5 கோடி மோசடி – ஒருவர் கைது!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies