அமெரிக்காவில் பணிபுரியும் புலம்பெயர் பணியாளர்களில் இந்தியர்கள் 14 சதவீதம் அங்கம் வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன்மூலம் ஹெச்-1பி விசா மூலம் இந்தியர்கள் அதிகளவில் பயனடைந்ததும் தெரியவந்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு வரையிலான நிலவரப்படி, இந்தியாவில் பட்டப்படிப்பை நிறைவு செய்த ஒரு கோடியே 40 லட்சம் பேர் அமெரிக்காவில் பணிபுரிவது தெரியவந்துள்ளது.
கடந்த 2018 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகாலத்தில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களில் 48 சதவீதத்தினர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.