முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் இணைந்து மது ஒழிப்பு மாநாடு என்ற மிகப்பெரிய நாடகத்தை நடத்துகின்றனர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
10 கோடி உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி தான். தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எண்ணத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது/ பொது மக்களும் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்..
திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி செல்பவர்களில் நானும் ஒருவன். திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரம் என்னை ஒரு பக்தனாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது, என்னுடைய வழிபாட்டு உரிமையில் கலங்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் ஒய் எஸ் ஆர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட இவ் விவகாரம் சாதாரண விஷயம் அல்ல..
ஏ ஆர் ஜி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் நெய் தரமற்று இருப்பதாக கூறப்படுகிறது விவகாரம் சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது அந் நெய்யில் கலப்படம் இருந்தது என அம் மாநில முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்
இவ் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால்தான் அங்கு மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் தான் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு இதே பாஜக உடன் திமுக கூட்டணி வைத்தது பல முக்கிய துறைகளை நிர்வகித்தார்கள் என்பதை வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். கூட்டணியில் இவ்வாறு அரவணைத்துச் சென்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
விஜய் எல்லோருக்கும் பொதுவான தலைவராக இருப்பார் என மக்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அவர் நம் மாதிரி இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என கடந்த இரண்டு நாட்களில் அவருடைய நடவடிக்கை தெரிகிறது
விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து சொல்லவில்லை. மாறாக பெரியார் இடத்திற்கு சென்று மரியாதை செய்கிறார். மரியாதை செய்து ஒன்றும் தவறில்லை
கட்சி ஆரம்பிக்கும் பொழுது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானராக இருப்பார் என்று மக்கள் எண்ணமாக இருந்தது தற்போது அவர் அவ்வாறு இருக்க மாட்டார் என்று தெரிகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.