செந்தில் பாலாஜிக்கு கிடைத்திருப்பது ஜாமின் மட்டுமே, விடுதலை அல்ல என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பியுள்ளார். அதில், செந்தில் பாலாஜி மீது வழக்குப் போட்டது தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தான் என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இருக்கும்போது துரோகியாக இருந்த செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றவுடன் தியாகியா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
செந்தில் பாலாஜியை தியாகி என்று கூறுவதற்கு, சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டா சிறை சென்றார்? என்றும் அவர் வினவியுள்ளார்.
இண்டி கூட்டணி செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததை கொண்டாடுவதாகவும், இது ஜாமின் தானே தவிர விடுதலை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று நீதிமன்றம் சொன்னவரை அமைச்சராக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என திமுக சிந்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறையில் இருக்க காரணம் நீதிமன்ற ஜாமின் மறுக்கப்பட்டதனாலே தவிர, மத்திய அரசால் அல்ல என தெளிவுபடுத்தியுள்ளார்.