திமுக அரசு எத்தனை தடைகள் போட்டாலும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வளர்ச்சியை தடுக்க முடியாது - ஏ.என்.எஸ் பிரசாத்
Sep 18, 2025, 05:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசு எத்தனை தடைகள் போட்டாலும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வளர்ச்சியை தடுக்க முடியாது – ஏ.என்.எஸ் பிரசாத்

Web Desk by Web Desk
Sep 27, 2024, 10:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு எத்தனை தடைகள் போட்டாலும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : ஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்தை தடை செய்ய முயற்சிக்கும் திமுக அரசின் செயல் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

உலகத்தின் தலைசிறந்த சேவை இயக்கம் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேகவ சங்கம்’ (ஆர்.எஸ்.எஸ்)1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இன்று வரை பல தடைகளை தகர்த்து மக்களின் ஒருமித்த ஆதரவுடன் ஒரு நூற்றாண்டை 2025- ம் ஆண்டில் வெற்றியோடு கொண்டாட உள்ளது

மேலும் ஆர் எஸ் எஸ் இயக்கம் உலக மக்களின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் மனித நேயத்திற்கும் வழிகாட்டும் விதமாக “ஏகாத்ம மாணவ தர்ஷன்” என்கிற உலகின் மிகச்சிறந்தவாழ்வியல் தத்துவத்தை வழங்கி உள்ளது

ஆர் எஸ் எஸ் நடவடிக்கைகள் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கிய பிறகு இந்த ஆண்டு விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த பேரணி மிகவும்சிறந்த முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

திமுக அரசு தமிழகத்தில் பதவி ஏற்றதிலிருந்து இந்து மதத்திற்கு எதிராக, இந்து இயக்கங்களுக்கு எதிராக, இந்து மக்களின் உணர்வுகளுக்கு எதிராக
இந்து கடவுள்களை இகழ்ந்தும், கோவில்களை இடித்தும் தொடர்ந்து அடக்கு முறையை ஏவி விட்டு வருகிறது.

குறிப்பாக இந்து அமைப்புகளின் வளர்ச்சியை தடை செய்யும் நோக்கத்துடன்,
திமுக அரசின் காவல்துறை, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதிக்கவில்லை.

காவல்துறையின் ஆணவப் போக்கை சுட்டிக்காட்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்கள் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமைதியாக நடந்து வந்த சூழ்நிலையில் அக்டோபர் 6-ம் தேதி தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த அந்தந்த மாவட்ட காவல்துறை தடை விதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர்களிடம் அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ் விண்ணப்பித்தும் உள்நோக்கத்தோடு திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை வேண்டுமென்று ஊர்வலம், பேரணிக்கு அனுமதி தராமல் வேண்டுமென்று தாமதம் செய்து வந்தது அரசியல் அடக்குமுறை.

கடந்த இரண்டு ஆண்டுகளும் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து, தடை செய்ய முயற்சி செய்தது போல் இந்த ஆண்டும் திட்டமிட்டு காவல்துறை ஆர்எஸ்எஸ் பேரணியை தடுக்க திட்டமிடுவதின் மூலம் தமிழக அரசின் சதி மக்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுவரை நடந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புகள் அனைத்தும் எந்தவித
அசம்பாவிதம் இன்றி மிகுந்த அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என்று பொய்யாக வீர வசனம் பேசும் மக்கள் விரோத திமுக அரசு, மறு பக்கம் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் செயல்படும் ஏதேச் சதிகாரமான போக்கு கண்டனத்திற்குரியது.

ஆர் எஸ் எஸ் நடவடிக்கைகள் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கிய பிறகு இந்த ஆண்டு விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த பேரணி மிகவும் சிறந்த முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்பொழுது தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் செய்யும் மக்கள் சேவையால் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று ஏராளமான மக்கள் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கு கொள்கின்றனர்.
குறிப்பாக கொரோனா நோய் தொற்று காலத்தில், தமிழகத்தில் மிகப்பெரிய வெள்ள அபாயம் ஏற்பட்ட சூழ்நிலையில் மக்களுக்காக ஆயிரக்கணக்கான ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இரவு பகலாக சேவை செய்து மக்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்து வந்தனர்.

தேசத்தின் வளர்ச்சிக்கும், இந்துக்களின் ஒற்றுமைக்கும் பாடுபட்டு வரும் வலிமையான ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை கண்டு பதம் வரைக்கும் திமுக அரசு, ஆர்எஸ்எஸ் எழுச்சியை இனி தமிழகத்தில் தடுத்து அணை போட முடியாது என்பதை உணர வேண்டும்.

அக்டோபர் 6-ம் தேதி நடக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு முட்டுக்கடை போடுவது நிறுத்தி, தமிழக காவல்துறையின் பொய்காரணங்கள் அவதூறு பிரச்சாரங்களுக்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும்.

காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் இதில் தலையிட்டு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ஏ.என்.எஸ் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

Tags: tamilnaduTamilNadu BjpRSSDMK governmentrss marchRashtriya Swayamsekava SangamBJP State Spokesperson ANS Prasad
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை தடை!

Next Post

இந்து கோயில்களின் உண்டியல் மட்டும் திமுக அரசுக்கு வேண்டுமா? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

Related News

கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தீவிரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராணுவ தளபதி அசிம் முனீர் உத்தரவிட்டார் – ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி பேசிய வீடியோ வைரல்!

கடந்த முறையைவிட அடுத்த முறை பாஜகவின் வெற்றி மேலும் அதிகரிக்கும் : அண்ணாமலை நம்பிக்கை!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

டெலிவரி செய்ய தார் காரில் வந்த ஊழியர்!

திருவண்ணாமலை : இட ஒதுக்கீட்டுக்கு போராடி உயிர்விட்ட 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்!

கொடிகம்பங்கள் அமைக்கும் விவகாரம் : விதிமுறைகளை பின்பற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை சூளைமேட்டில் மழைநீர் கால்வாய் பணி : மண்ணில் புதைந்த கட்டடங்கள்!

பாலிவுட் நடிகை  திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு : குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசார்!

நேபாள இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கியுடன் பேசிய பிரதமர் மோடி!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு, பட்டியலின – பழங்குடியினர் ஆணையம் உத்தரவு!

ஜமைகா : பெருவெள்ளத்தால் நீரில் மூழ்கிய வாகனங்கள்!

மயிலாடுதுறையில் பட்டியலின இளைஞர் படுகொலை!

சூர்யகுமார் யாதவை தவறாக பேசிய முகமது யூசுப் – இந்திய மக்கள் கண்டனம்!

விளையாட்டாக தூக்கில் தொங்கிய இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies