இந்துக் கோயில்கள் வேண்டாம். கடவுள் வேண்டாம் என சொல்லும் திமுக அரசுக்கு, கோயில்களில் இருக்கும் உண்டியல்கள் மட்டும் வேண்டுமா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக பலம் பொருந்திய கட்சியாக வரும். மக்களுக்கான கட்சி என்றால் அது பாஜக தான்.பிரதமர் மோடி பரந்த மனம் கொண்டவர். தமிழக முதல்வர் ஏன் நிதி ஆயோக் கூட்டத்திற்கு ஏன் செல்லவில்லை
பிரதமரை சந்திக்கும் போது வந்தே பாரத் ரயிலுக்கு நன்றியும் , தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கத்திற்க்கு நன்றியும் …தமிழகத்திற்கு பிரதமர் கொடுத்த நல்ல திட்டத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் புதிய கல்வி கொள்கையை ஏற்று கொள்ள வேண்டும்.
இந்து சாமி வேண்டாம் ! இந்து கோயில் வேண்டாம் ! இந்து மதம் வேண்டாம் ஆனால் கோயில் உண்டியல் மட்டும் திமுகவுக்கு வேண்டுமா என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.