துப்பாக்கியால் சட்ட ஒழுங்கை சரி செய்து விட முடியாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை DD தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் “தூய்மை வாரம்” முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
கடந்த 17 இல் இருந்து அக்டோபர் 2 வரை சேவை வாரங்களாக கடந்த 10 ஆண்டுகளாக கொண்டாடி வருகிறோம். பிரதமர் மோடி பிறந்த தினம் முன்னிட்டு மருத்துவ முகாம்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது
தூய்மையான இந்தியாவை வழிநடத்தி வரும் நிலையில், அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது/ பெண் குழந்தைகள் இருக்கிற இடத்திற்கும், பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகளில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது
தாயின் பேரில் மரங்களை வைக்க வேண்டும் என்று பல இடங்களில் மரங்களை நட்டு வைத்து வருகிறோம்.2014 இல் இருந்து இந்த நாட்டை பசுமையாக்க முயற்சி செய்து வருகிறோம்.
பாம்பன் பாலம் 100 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளது. சென்னை ICF இல் தயாரிக்கப்பட்ட ரயில்கள் இந்தியா முழுவதும் செல்கிறது.ஆட்டோ மொபைல் துறையில் சென்னை மிகப்பெரிய அங்கமாக இருக்கிறது/மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஆப்பிள் போன்கள், இராணுவ பொருட்கள் 53,000 கோடிக்கு உற்பத்தி செய்து வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்
கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்கவிக்கும் விதத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி அனைவரும் காதி பொருட்களை வாங்க வேண்டும்.
உதயநிதி துணை முதல்வராக வருவதால் தமிழ் நாட்டில் பெரிய முன்னேற்றம் வரப்போவது இல்லை.தமிழ்நாட்டில் சாராயம் காய்சும் பணி நிற்கப்போவது இல்லை. தமிழ்நாட்டில் போலீசார் யாரை கண்டாலும் சுடும் நோக்கில் உள்ளனர்.பின்பு சட்டம் எதற்கு இருக்கிறது?
அடுத்தடுத்து வாரிசு வருவார்கள், மற்ற படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் வரப்போவது இல்லை. துப்பாக்கியால் சட்ட ஒழுங்கை சரி செய்து விட முடியாது.இந்தியா முழுவதும் சட்டத்தின் ஆட்சி நடக்கின்ற மாநிலங்களாக இருக்கிறது.அதை விட்டுவிட்டு சுட்டு பிடிப்பதால் நீதிமன்றம் கொடுக்கும் நீதியை கொடுத்து விட முடியாது
செந்தில் பாலாஜி ஜாமீனில் மட்டுமே வெளியே வந்துள்ளார். பல தொழில் நிறுவனங்களை நடத்துவதே திமுக காரர்கள் தான். மது ஒழிப்பு மாநாடு ஸ்டாலின் மற்றும் திருமா இணைந்து நடத்தும் ஒரு டிராமா. பீகார், குஜராத் போன்ற மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்தும் போது தமிழ்நாடு அமல்படுத்துவதில் என்ன சிக்கல் என எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.