குமரியில் கடற்கரை கிராமங்களில் இருந்து அரியவகை மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மணல் ஆலையை மூடக் கோரியும் மீனவ கிராம மக்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று ஆலைக்கு எதிராக கண்டன கோஷங்களை ஏழுப்பினர். மேலும், பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனர்.
















