சேலத்தில் வழக்கறிஞர் ஒருவர் காவல் நிலையத்தில் அவமதிக்கப்பட்டதை கண்டித்து சக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேச்சேரி பகுதியில் வழக்கறிஞர் ஒருவர் காவல்நிலையத்தில் அவமதிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.