ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பவானி அடுத்த குறிச்சி பகுதியை சேர்ந்த மூதாட்டி செல்லம்மாள், கணவர் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார்.
மூதாட்டியின் நிலத்தை தானமாக பெற்ற அவரது மகன் சக்திவேல், அவரை முறையாக கவனிக்காமல் ஏமாற்றியுள்ளார். இதனால் மூதாட்டி செல்லம்மாள் உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி அவதிப்பட்டு வந்துள்ளார்.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த மூதாட்டி, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மூதாட்டியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்