ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஆலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் என சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கிகாரம், 8 மணி நேர பணி நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
இந்த போராட்டத்தை கைவிடக்கோரி 5 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், 19வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு இதில் தலையிட வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.