சவூதி அரேபியாவின் தம்மம் நகரிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் கைப்பேசி பேட்டரியில் மறைத்து கடத்தி வரப்பட்ட இரண்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தம்மம் நகரிலிருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் வந்திறங்கினார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத் துறை அதிகாரிகள், அவரது கைப்பேசியை பரிசோதித்தபோது, அதன் பேட்டரி பேட்டரியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 200 கிராம் எடை கொண்ட இரண்டு தங்கக் கட்டிகள் சிக்கின.