மன்கிபாத் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி பாராட்டி ஊக்கப்படுத்தி பேசியது மகிழ்ச்சியளிப்பதாக, மதுரையில் 500 மூலிகைகளை வளர்த்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியை சுபஸ்ரீ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் வரிச்சையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக சுபஸ்ரீ பணியாற்றி வருகிறார். இவர் நாட்டார்மங்கலம் கிராமத்தில் 40 செண்டு நிலம் வாங்கி, அகத்தி, அகில், சூரைப்பழம் என 500 மூலிகைகளை பண்ணையில் நட்டு வளர்த்து வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி மன்கிபாத் நிகழ்ச்சியில், ஆசிரியை சுபஸ்ரீயை ஊக்கப்படுத்தி பேசியிருந்தார். நமது காலடியில் உள்ள மூலிகைகள் குறித்து தெரிந்து கொள்ளாமலே நாம் வாழ்க்கையை கடந்து செல்வதாகவும், இன்றைய தலைமுறைக்கு மூலிகைகளின் பயன்பாட்டை தெரிய வைக்கவும், மூலிகைகளை மீட்டெடுக்கவும் மூலிகைத் தோட்டம் அமைத்துள்ளதாகவும் ஆசிரியை சுபஸ்ரீ தெரிவித்துள்ளார்.