புதுக்கோட்டையில் மகளை கேலி செய்ததை தட்டிக்கேட்ட தந்தை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீராணம்பட்டியை சேர்ந்த சின்னராஜ் என்பவரது மகள் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது மகளை அதே பகுதியை சேர்ந்த முருகன் என்ற இளைஞர் கிண்டல் செய்துள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து தட்டிக்கேட்ட மாணவியின் தந்தையை முருகன் குத்தி கொலை செய்தார். இந்நிலையில், கொலை செய்த முருகனை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.