10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஓர் அமைச்சர் கூட ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, சார்க்கி தாத்ரி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமானோர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததாகவும், அதில் சிலர் சிறைக்குச் செல்ல நேர்ந்ததையும் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்ததை மேற்கோள்காட்டிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அவருக்கு நகைச்சுவையாக பதிலளித்தார்.
அந்த வகையில், மல்லிகார்ஜுன கார்கே 125 ஆண்டுகள் வாழ வேண்டும் என்றும், அந்த 125 ஆண்டுகளும் நாட்டின் பிரதமராக மோடியே நீடிக்க வேண்டும் என்றும் தாம் பிரார்த்திப்பதாக ராஜ்நாத் சிங் நகைச்சுவை கலந்த தொனியில் பேசினார்.