பிரதமர் மோடி தரம்தாழ்ந்த வகையில் விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா கண்டனம் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கார்கே, மேடையிலேயே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். பின்னர் ஆசுவாசமடைந்த அவர், பிரதமர் மோடியை விமர்சித்து பேசினார்.
இந்த நிலையில், அவருக்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றாமல் உயிரை விடமாட்டேன் என தனது உடல்நிலையைக் குறிப்பிட்டு கார்கே பேசியது ரசிக்கும்படியாக இல்லை என விமர்சித்துள்ளார்.