பீகாரின் கோசி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வட மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
சீதாமர்ஹி மாவட்டத்தின் மந்தர் அணை உடைந்ததால் சீதாமர்ஹியின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கட்ராவில் உள்ள பகுச்சி பவர் கிரிட் வளாகத்தில் தண்ணீர் புகுந்ததால், முசாபர்பூர் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்து காணப்பட்டது.
கோசி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுபால் மாவட்டம் வெள்ளத்தால் சூழ்ந்து காணப்பட்டது. மேலும், குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.