திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வழிபாட்டிற்காக சென்ற ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இறை நம்பிக்கை படிவத்தில் தனது மகளுக்காக கையொப்பமிட்டார்.
திருப்பதியில் இருந்து திருமலை கோயிலுக்கு யாத்திரையாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் குடும்பத்தினருடன் சென்றார்.
அப்போது அவருடைய மகள் பலினி அஞ்சலி மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இறை நம்பிக்கை படிவத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர். அதில் அவருடைய மகளும், அவர் மைனர் என்பதால் துணை முதலமைச்சர் பவன்கல்யாணும் கையொப்பமிட்டனர்.