ராமநாதபுரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உப்பு உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு உப்பு நிறுவனம் மற்றும் பல தனியார் உப்பு உற்பத்தி நிறுவனங்கள் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பருவமழைக் காலம் முடிந்து மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரை இரண்டரை லட்சம் டன் அளவிற்கு உப்பு உற்பத்தி நடைபெறும். இந்நிலையில், தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், தற்போது உப்பு உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் உற்பத்தி அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளர்களும், உப்பள தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.