ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி சண்டிகரில் உள்ள, தலைமைச் செயலகத்தில் தனது புதிய அமைச்சரவை சகாக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், அவர்களுக்கு தனது கரங்களால் இனிப்பு வழங்கி வாழ்த்து கூறினார். அப்போது, பாஜகவின் ஹாட்ரிக் வெற்றிக்கும், முதல்வர் நயாப் சிங் சைனிக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், மலர்கொத்து வழங்கி நன்றியும் தெரிவித்தனர். இதனால், தலைமைச் செயலகம் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் மிதந்தது.