திருச்சியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அண்ணாநகர் பகுதியை சேர்ந்த தவ்பீக் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றனர்.
பின்னர் இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.