இன்று பிறந்த நாள் கொண்டாடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், அமித் ஷா கடின உழைப்பாளி என தெரிவித்துள்ளார். அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா விடுத்துள்ள பதிவில், தேசத்திற்கான உங்கள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நிறுவன திறன்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும். தேசிய மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பில் உங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மறக்க முடியாதது என தெரிவித்துள்ளார்.
மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அமித் ஷாவின் உள்நாட்டு மற்றும் தேசிய பாதுகாப்புக்கான முயற்சிகள் இந்தியாவை உலகளவில் வலிமையாகவும் சக்திவாய்ந்ததாகவும் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வலுவான தலைமையின் கீழ், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.