பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து ரஷ்யா புறப்பட்டு சென்றார்.
பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு `பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் 16ஆவது உச்சி மாநாடு `உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ என்ற கருப்பொருளுடன் ரஷ்யா தலைமையில் நடைபெற உள்ளது.
கசான் பகுதியில் இன்றும் நாளையும் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
பிரிக்ஸ் மாநாட்டில் உலகளாவிய சமூகத்தை பாதிக்கும் முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக நடந்துவரும் உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வரவும் ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்துவார் என தெரிகிறது.
பிரிக்ஸ் மாநாட்டையொட்டி ரஷ்யாவின் காசான் நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.