தொழில் போட்டியால் பயங்கரம்! : இந்திய வம்சாவளி தொழிலதிபர் மகள் உகாண்டாவில் கைது!
Mar 19, 2026, 10:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தொழில் போட்டியால் பயங்கரம்! : இந்திய வம்சாவளி தொழிலதிபர் மகள் உகாண்டாவில் கைது!

Murugesan M by Murugesan M
Oct 23, 2024, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுவிஸ்நாட்டு கோடீஸ்வரரின் மகளான வசுந்தரா ஓஸ்வால் உகாண்டாவில் சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யார் இந்த வசுந்தரா ஓஸ்வால் ? எதற்காக உகாண்டாவில் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சுவிஸ் நாட்டு தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வால், இந்திய தொழிலதிபர் அபய் குமார் ஓஸ்வாலின் மகனாவார். பங்கஜ் ஓஸ்வால் மற்றும் அவரது மனைவி ராதிகா ஓஸ்வால் ஆகியோரின் 26 வயது மகள் வசுந்தரா ஓஸ்வால்.

ஓஸ்வால் அக்ரோ மில்ஸ் மற்றும் ஓஸ்வால் கிரீன்டெக் நிறுவனரான பங்கஜ் ஓஸ்வால், குளோபல் பெட்ரோ கெமிக்கல்ஸ், ரியல் எஸ்டேட், உரங்கள் மற்றும் சுரங்கத் தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தனால் உற்பத்தி ஆலையின் தலைவராக இருக்கும் 26 வயதான வசுந்தரா ஓஸ்வால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவிஸ் தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வாலின் மகளாவார். ஓஸ்வால் குழுமத்தின் உலகளாவிய விரிவாக்கத்தில், வசுந்தரா ஓஸ்வாலின் பங்கு முக்கியமானது.

குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ஓஸ்வால் குழுமத்தின் வணிக சாதனைகளுக்காக கடந்த ஆண்டுக்கான குளோபல் யூத் ஐகான் விருது வசுந்தரா ஓஸ்வாலுக்கு வழங்கப் பட்டது.

தனது இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பின்போது, வசுந்தரா ஓஸ்வால், PRO இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியதோடு, தற்போது அதன் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.

உகாண்டாவில் ஓஸ்வால் குழுமத்தின் மது ஆலையில் இருந்து ஆயுதம் ஏந்திய 20 மர்ம நபர்களால் வசுந்தரா ஓஸ்வால் கடத்தப்பட்டதாகவும், கொலைக் குற்றச்சாட்டின் கீழ் 20 நாட்களுக்கும் மேலாக சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வசுந்தரா ஓஸ்வால் மீதான குற்றச்சாட்டுகளை ஓஸ்வால் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவிஸ் தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வால், தனது மகள் வசுந்தரா ஓஸ்வால் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் உகாண்டாவில் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டதாக ஐநா சபையில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

முன்னதாக, உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனிக்கு எழுதிய கடிதத்தில், தங்கள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், தங்கள் குடும்பத்திடம் இருந்து 200,000 அமெரிக்க டாலரை கடனாக பெற்றதாகவும் வசுந்தரா மீது அந்த ஊழியர் பொய் குற்றச்சாட்டுக்களைக் கூறியிருப்பதாகவும், பங்கஜ் ஓஸ்வால் தெரிவித்துள்ளார். வசுந்தராவால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் தான்சானியாவில் போலீசாரிடம் பிடிபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தான், வசுந்தரா இக்கட்டான சூழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், குளிக்காமல், உடை மாற்றாமல், ஷூக்கள் நிறைந்த அறையில் தங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதிகாரிகளால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், வசுந்தரா ஓஸ்வாலின் இன்ஸ்டா பக்கத்தில் அவரது சகோதரி ரிடி ஓஸ்வால் பதிவிட்டிருக்கிறார்.

மேலும், கொலை போன்ற கொடூரமான குற்றங்களில் குற்றவாளிகளுக்கான சிறையில் இரண்டரை வாரங்களுக்கும் மேலாக உகாண்டாவில் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும்,. எந்த ஆதாரமும் இல்லாமல், காவலில் வைக்க எந்த சரியான காரணமும் இல்லாமல் வசுந்தரா ஓஸ்வால் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

உகாண்டாவில், 90 மணிநேரம் காவலில் வசுந்தரா ஓஸ்வால் இருந்தபோது எடுக்கப்பட்டதாக ரிடி ஓஸ்வால் ஒரு ஆடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.

நிறுவனத்தின் வழக்கறிஞர் ரீட்டா நகாபிரே உட்பட பல ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவலில் வைக்கப்பட்ட பிறகு வசுந்தரா ஓஸ்வால் அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதி மறுக்கப் பட்டதாக அவரது சகோதரி இன்ஸ்ட்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ.நா. சபை விரைவில் நல்ல தீர்ப்பை வழங்க பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். உகாண்டாவில் தொழில் போட்டி காரணமாக, தமது சகோதரி சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ரிடி ஓஸ்வால் கூறியுள்ளார்.

Tags: Terrified by business competition! : Daughter of Indian-origin businessman arrested in Uganda!
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்! :

Next Post

பழுதான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies