உதகை – குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகிறது.
அத்துடன், கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நிற்பதால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பல முறை புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலை துறையும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.