விடியா ஆட்சியை வீழ்த்திட விக்கிரவாண்டி வாருங்கள் என திமுக-வினரை சீண்டும் வகையில் மதுரையில் தவெக-வினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மதுரையின் பல்வேறு இடங்களில் “விடியா ஆட்சியை வீழ்த்திட விக்கிரவாண்டி வாருங்கள் என்றும், “மன்னர் ஆட்சிக்கு முடிவு தளபதியால் மக்களாட்சிக்கு விடிவு” எனவும் திமுகவுக்கு எதிராக தவெக-வினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.