தீபாவளிக்கு போனஸ் வழங்கக்கோரி, கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
பின்னர் அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு அளித்ததால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.