கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி கவிழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த டென்னிசன் வெல்வின் அஜீஸ், மதுபோதையில் தனது சகோதரர் மற்றும் சிறு குழந்தையுடன் காரில் அருமனை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
அப்போது கார் விபத்துக்குள்ளான நிலையில், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து குழந்தை உட்பட மூவரையும் சிறு காயங்களுடன் மீட்டனர். மதுபோதையில் இருந்த டென்னிசன் காரின் மீது ஏறி தகராறில் ஈடுபட்ட நிலையில், தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.