இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மனிதர்களை பூமியை தாண்டி வேற்று கிரகங்களில் குடியேற்றம் செய்வதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளது.
முதல் கட்டமாக பூமியை தாண்டிய வேறு கிரகங்களில் மனிதர்கள் தங்குவதற்கான குடில்களின் சோதனையை லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் தொடங்கி உள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் இஸ்ரோ தெரிவித்ததுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் 2030 ஆம் ஆண்டுவாக்கில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றம் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கிய நிலையில் இஸ்ரோவும் இந்த சோதனையில் தற்போது இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.