என்ன சாதனை செய்ததற்காக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வீரப்பம்பாளையத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக குடும்ப கட்சி எனவும், அந்த கட்சி கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது என்றும் தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சியின் கடைசி நேரத்தில் சேலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும், அவர் இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்தில் என்ன திட்டத்தை கொண்டு வந்துவிடப் போகிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.