சென்னை பட்டினப்பாக்கத்தில் அடையாறு முகத்துவாரத்தைத் தூர்வாரும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
பருவமழை காலங்களில் நீர் நிலைகளில் இருந்து வெளியேறும் நீர் குடியிருப்புகளுக்குள் புகாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நீர் நிலைகள் சுத்தம் செய்தல், முகத்துவாரங்களை தூர்வாரி அடைப்புகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக பட்டினபாக்கம் அடையாறு முகத்துவாரத்த்தின் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னையின் மிக முக்கிய நீர் நிலையான அடையாறில் வெள்ள பெருக்கும் ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் நீர் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்தாண்டு மழையின் போதும் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது.
இந்நிலையில், மணல் திட்டுக்கள் அகற்றி முகத்துவாரத்தை சீரமைக்கும் பணி மற்றும் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
150 மீட்டர் அகலத்தில் உள்ள மணல் திட்டுக்கள் அகற்றப்படுகிறது. விறுவிறுப்பாக நடந்துவரும் இந்த தூர்வாரும் பணிகள் அடுத்த ஓரிரு வாரங்களில் நிறைவுபெறும் என கூறப்படுகிறது.